×

‘கங்குவா’ :  முதல் சிங்கிள் 'பையர் சாங்’ வெளியானது..!

 

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் முதல் பாடலான ‘ஃபையர் சாங்’ வெளியானது. இந்தப் பாடலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் நடனம் அமைத்துள்ளார்.சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

<a href=https://youtube.com/embed/tPGHoOMKkuI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/tPGHoOMKkuI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள  ‘பையர் சாங்’ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.