×

சூர்யாவின் ’கங்குவா’ ஷூட்டிங் நிறைவு.. படக்குழு கொடுத்த செம்ம அப்டேட் 

 

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா முதல் முறையாக 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.  ஃபேண்டஸி கதைக்களத்தில் அதிகபட்ச அனிமேஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இந்த படப்பிடிப்பு ப்ரீயட் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு துவங்கவிருக்கிறது.