×

ரசிகர்களை குஷிப்படுத்தும் ‘கங்குவா’ பட லேட்டஸ்ட் தகவல்.  

 

நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரை மாற்றவுள்ள திரைப்படமாக உருவாகி வருகிறதுகங்குவா’. வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பீரியாடிக் போர்ஷன் அனைத்தும் கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களில் உள்ள காட்டு பகுதியில் படமாக்கப்பட்டு வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் படக்குழு அனைத்து பொருட்களையும் தூக்கிக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றார்களாம்; பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா தினமும் 2மணி நேரம் மேக்அப் போடுகிறாராம; தற்போது சூர்யா-தீஷா பதானி இடையிலான காட்சிகள் கோவா, எண்ணூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் புஷ்பா, கேஜிஎப்2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய கேமரா குழு இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இதுவரை பார்த்திராத பல புதிய கெட்டப்புகளில் சூர்யாவை பார்க்கலாம் என்றும் தகவல் வந்துள்ளது. ‘கங்குவா’ படத்தின் மொத்த பணிகளும் முடிந்து அடுத்த ஆண்டு நவம்பரில் படத்தை திரையில் பார்க்கலாம் என்றும் தகவல் வந்துள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்தியுள்ளது.