×

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர் வெளியானது..!

 

சூர்யா - சிறுத்தை சிவா இணைப்பில் உருவாக்கியுள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

<a href=https://youtube.com/embed/ajnCMSC4VPo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/ajnCMSC4VPo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

தீவு, மர்மம் என பின்னணி குரலுடன் தொடங்கும் ட்ரெய்லர் பிரம்மாண்டத்தின் காட்சியாக விரிகிறது. வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா தோன்றுகிறார். அவரின் என்ட்ரி கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது. முழு ட்ரெய்லருமே பிரம்மாண்டமாக இருக்கிறது. பாபி தியோல், சூர்யாவின் வசனங்களும், தேவிஸ்ரீ பிரசாத் இசையும் கவனம் ஈர்க்கின்றன. அதேநேரம் ரத்தம் சொட்டும் காட்சிகள் திகைப்பை ஏற்படுத்துகின்றன.