ஆகஸ்ட் 12ஆம் தேதி கங்குவா படத்தின் டிரைலர் ரிலீஸ்..
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் கடந்த மாதம் வெளியானது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. படத்தின் டிரைலர் குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். போஸ்டரில் சூர்யா கத்தியை வைத்துக் கொண்டு மண்ணில் ஊன்றிய படி பின்னால் பெரிய இறக்கைகளுடன் காணப்படுகிறார். டிரைலரை பார்க்க ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.