கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகர் உபேந்திரா
வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது. முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது. கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர். தற்பொழுது படத்தில் உபேந்திரா நடிக்கவுள்ளதை படக்குழு அதிகார்ப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தில் அவர் கலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். உபேந்திரா கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராவார். இவர் சத்யா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.