×

எதிர்கால கதையாக உருவாகும் சுதீப்பின் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ 

 

கன்னட நடிகர் சுதீப், ‘நான் ஈ’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். புலி, முடிஞ்சா இவன புடி உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘விக்ராந்த் ரோணா’ பான் இந்தியா படமாக வெளியானது. இந்நிலையில் அவர் நடிக்கும் மற்றொரு பான் இந்தியா படத்துக்கு ‘பில்லா ரங்கா பாட்ஷா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ‘ஹனுமான்’ படத்தைத் தயாரித்த கே.நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி தயாரிக்கின் றனர். ‘விக்ராந்த் ரோணா’ படத்தை இயக்கிய அனுப் பண்டாரி இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கான கான்செப்ட் வீடியோ, சுதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. அதில் கி.பி 2209-ம் ஆண்டு, அதாவது எதிர்காலத்தில் கதை நடப்பது போல காட்டப்பட்டுள்ளது. இயக்குநர் அனுப் பண்டாரி கூறும்போது, “சுதீப்புடன் பணிபுரிவது எப்போதும் சிறந்த அனுபவம். மக்கள் விக்ராந்த் ரோணாவை ரசித்தார்கள். இந்தப்படத்தை இன்னும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.