×

லியோ படத்தின் கன்னட போஸ்டர் வெளியானது

 

விஜய் நடிக்கும் லியோ படத்தின் கன்னட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை வௌியிட்ட படக்குழு, தற்போது கன்னட படத்தையும் வௌியிட்டுள்ளது.