×

4பெண்கள்…ஒரு கதை- வெளியானது ‘கண்ணகி’ பட டிரைலர்.

 

கவனம் ஈர்க்கும் வகையில் ‘கண்ணகி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஸ்கைமூன் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் இஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கண்ணகி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

<a href=https://youtube.com/embed/oZqFja2YN7g?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/oZqFja2YN7g/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Kannagi Official Trailer | Ammu Abhirami, Vidhya, Shaalin, Keerthi |Yashwanth |M. Ganesh, J. Dhanush" width="716">

4 பெண்களின் வாழ்கை காட்டப்படுகிறது அதில் கீர்த்தி பாண்டியன்- திருமணமாகாமல் கர்பமான கருவை கலைக்க முயல்கிறார். அடுத்து அம்மு அபிராமி –பல முறை மாப்பிள்ளை பார்த்தும் கைகூடாமல் விரக்தியில் உள்ளார். வித்யா பிரதீப்- கணவரின் வற்புறுத்தலால் விவாகரத்திற்கு செல்கிறார். இறுதியாக ஷாலின்- திருமணத்தை வெறுத்து லிவ்வின் வாழ்க்கையில் நாட்டம் கொள்கிறார். இப்படியாக நான்கு பெண்களின் வாழ்கை ஒரே கதையில் எமோஷனலாக காட்டியுள்ளார் இயக்குநர். தற்போது வெளியாகியுள்ள டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.