×

`கண்ணப்பா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள `கண்ணப்பா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.