அதிக வரி செலுத்தும் நடிகைகள் பட்டியலில் கரீனா கபூர் முதலிடம்
Sep 6, 2024, 15:45 IST
2024-ல் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலை பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில், நடிகை கரீனா கபூர் தனது வெற்றிகரமான படங்கள் மூலம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளார். இதன் மூலம் அதிக வரிகட்டியதில் பல பிரபல நடிகைகளை விஞ்சி அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2024-ல் அவர் ரூ.20 கோடியை வரியாக செலுத்தியுள்ளார். இந்த பட்டியலில் ரூ.12 கோடி வரி செலுத்தி கியாரா அத்வானி 2-வது இடத்தில் உள்ளார். நடிகர்கள் வரிசையில் ஷாருக்கான் ரூ.92 கோடி வரி கட்டி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய் ரூ.80 கோடி வரி கட்டி 2வது இடத்தில் உள்ளதாக பார்ச்சூன் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.