×

கும்பகோணத்தில் கார்த்தி27 படப்பிடிப்பு தீவிரம்

 

கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘96’.  பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர். பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் பிரேம்குமார் இயக்கவுள்ளார். கார்த்தியின் 27வது படமாக உருவாகும் இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல்முறையாக கார்த்தியுடன் அரவிந்தசாமி நடிக்கவிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில், கார்த்தி, அரவிந்த்சாமி, மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளனர்.