கார்த்திக்கு ஜோடியாகும் சமந்தா.. எந்த படத்தில் தெரியுமா ?
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ‘பேச்சிலர்’. இந்த படத்தின் மூலம் தற்போது பிரபலமாகியுள்ள இயக்குனர் சதீஷ் செல்வகுமார். இவரின் அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி கார்த்தியை வைத்து அடுத்த படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. அதோடு நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தாவிடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக உள்ள சமந்தா, தெலுங்கில் பிசியாக நடித்து வந்தார். சமீபகாலமாக தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் நிச்சயம் கார்த்தி மற்றும் சதீஷ் செல்வகுமார் கூட்டணியில் இணைவார் என்று நம்பப்படுகிறது. தமிழில் மீண்டும் சமந்தா நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.