கார்த்தி குறித்து நடிகை அனு இம்மானுவெல் நெகிழ்ச்சி...
கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உண்மைசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள படம் கார்த்தியின் ஜப்பான். வரும் தீபாவளி ஸ்பெஷலாக படம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து படத்தின் புரொமோஷன் பனிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், படத்தில் நாயகியாக நடித்துள்ள அனு இம்மானுவெல், நடிகர் கார்த்தி தான் தனது இன்ஸ்பிரேசன், தனது உத்வேகம் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஓயாமல் வேலை செய்வதை கண்டு ஆச்சரியப்பட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.