ஜீவா நடித்த ப்ளாக் திரைப்படத்தை பாராட்டிய கார்த்தி
Oct 20, 2024, 17:40 IST
மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். டைம் லூப் திரைப்படமாக இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார்.