☰
×

"சூர்யா அண்ணன் இன்னும், இன்னும் உயர்ந்துகொண்டே இருப்பார்".-கார்த்தி பேச்சு

 

சூர்யா நடிக்கும் படத்தின் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்ளும் கார்த்தி, அப்போது சுவாரஸ்யமாக சில விஷயங்களை பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ என்ற படத்தின் விழாவில் பேசிய அவர், சூர்யாவின் ரசிகர்களை பற்றி குறிப்பிட்டு மனம் நெகிழ்ந்தார். ‘வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால், முதலில் எதை நோக்கி செல்ல வேண்டும் என்ற ஒரு தெளிவு இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வெற்றி என்பது உடனே கிடைத்துவிடாது. அதற்கு நிறைய அவகாசம் தேவைப்படும். அதற்கு ஆண்டவன் அருளும் முக்கியம். காலம் நமக்கு கைகொடுக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரு நல்ல நோக்கம் இருக்க வேண்டும்.
ஒன்று, அதை நமக்காக செய்ய வேண்டும். ஆனால், நமக்காக ரொம்ப நாள் செய்தால் சலிப்பு ஏற்பட்டுவிடும். அதையே நம்மை சுற்றியிருக்கும் அன்பான மக்களுக்காக செய்தால் சலிப்பு ஏற்படாது. ரசிகர்களாகிய நீங்கள் இருக்கும் வரை, சூர்யா அண்ணன் இன்னும், இன்னும் உயர்ந்துகொண்டே இருப்பார். அதை நான் பெரிதும் நம்புகிறேன். .