×

‘ஜப்பான்’ ஷூட்டிங்கை முடித்த கார்த்தி.. புதிய அப்டேட் 

 

‘ஜப்பான்’ படத்தின் ஷூட்டிங்கை நடிகர் கார்த்தி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். 

இவர்களுடன் இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ‌ 

கடைசியாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வந்ததது. அங்கு ஒரு பகுதியில் 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.  இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து பேட்ஜ் ஒர்க் பணிகள் மட்டும் நடைபெற உள்ளது. அதேநேரம் உடனடியாக போஸ்ட் பிரொக்ஷன் பணிகளையும் படக்குழு தொடங்கவுள்ளது.