"அதுபோன்ற கதைகளை என்னிடம் சொல்லுங்கள்"-கார்த்தி வெளியிட்ட தகவல்
‘சர்தார் 2’. படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை சூர்யா வெளியிட்டார்.
விழாவில் கார்த்தி பேசியதாவது: இன்று திரையுலகம் இருக்கும் நிலையில், இவ்வளவு பிரமாண்டமாக ஒரு படத்தை தயாரிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. தயாரிப்பாளர் எனது நண்பராக இருந்தாலும், இவ்வளவு ரிஸ்க் எடுத்து தயாரித்துள்ளார். அவரை போன்றவர்களை பாதுகாப்பது நம் கடமை. ஹீரோயின் மாளவிகா மோகனன் என்று சொன்னவுடன், அவர் இந்த ஊரின் மோனிகா பெலூச்சி போல் இருந்தார். ஆஷிகா ரங்கநாத்தை அதிகமாக ஓட வைத்திருக்கிறோம். நான் ‘வாடா... போடா’ என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான இயக்குனர் பி.எஸ்.மித்ரன்.
‘சர்தார்’ படத்தின் முதல் பாகத்தில் நிறைய கேள்விகள் இருந்தது. அவரிடம் விளக்கம் கேட்டு நடித்தேன். அவர் என்ன சொன்னாலும் அதை நான் கேட்பேன். காரணம், அவரிடம் மிகப்பெரிய தெளிவு இருக்கிறது. இதுகுறித்து அவரிடம் பேசும்போது, ‘நிறைய கதைகள் இருக்கிறது. புதிய கதைகளை யோசிக்கிறேன். அதை ஹீரோக்களிடம் சொல்ல பயமாக இருக்கிறது’ என்பார். அதுபோன்ற கதைகளை என்னிடம் சொல்லுங்கள். நான் இருக்கிறேன்.