×

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா கார்த்தி - வெளியான அப்டேட்

 

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசிப் படம் இதுவே. தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மாரி செல்வராஜ் அவர் அடுத்து இயக்கப் போகும் படங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார். அவர் பைசன் திரைப்படத்திற்கு அடுத்து தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கப்போகிறார். அதைதொடர்ந்து கார்த்தியை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். `மாமன்னன் திரைப்படம் எடுக்கும் சமயத்தில் கார்த்தி என்னை நேரில் அழைத்து கதைக் கேட்டார், நான் ஒரு 5 நிமிட கதையை கூறினேன், என்னுடைய  கதைக்களமும், கதையின் வீரியமும் அவருக்கு நன்றாக புரிந்தது அதனால். நானும் அவரும் ஒன்றாக பணியாற்றவுள்ளோம்.' என கூறியுள்ளார். கார்த்தி தற்பொழுது மெய்யழகன், வா வாத்தியார், சர்தார் 2 , போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் பிரபல இயக்குனர்களுடன் இணைந்து படத்தில் நடித்து வருவதால் கார்த்தி நடிக்கும் படம் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.