×

‘சூர்யா 44’ படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்...!

 

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூர்யா 44 படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடைசியாக இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து இவர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் காதல் கதைக்களத்தில் கார்த்திக் சுப்பராஜ் ஸ்டைலில் உருவாகி இருக்கிறது.

அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், சூர்யா 44 படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “நடிகர் சூர்யா சிறந்த நடிகர்களில் ஒருவர். சூர்யா 44 படத்தை 2025 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டின் இறுதியில் ப்ரோமோஷன் பணிகளை தொடங்க இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.