×

"ஜகம் சுகம் அடைந்ததும்…. வெள்ளித்திரையில் ஜகமே தந்திரம்"… இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக இருப்பதாக நிறைய செய்திகள் உலவின. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார். ஜகமே தந்திரம் படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ‘ரகிட ரகிட’ பாடலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர்
 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக இருப்பதாக நிறைய செய்திகள் உலவின. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

ஜகமே தந்திரம் படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  மேலும் ‘ரகிட ரகிட’ பாடலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப்  படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜகமே தந்திரம் படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக இருப்பதாக வெளிவந்த வதந்திகள் குறித்து படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “ஜகம் சுகம் அடைந்ததும்…. வெள்ளித்திரையில் ஜகமே தந்திரம்” என்று தெரிவித்துள்ளார்.