கார்த்தியின் 'வா வாத்தியார்' டீசர் இன்று மாலை ரிலீஸ்...!
Updated: Nov 13, 2024, 12:30 IST
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “வா வாத்தியார்” படத்தின் டீஸர் இன்று (13-11-2024) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நீண்டகாலமாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.