×

தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன'.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

 

தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தனித்துவமான இயக்குனரான தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகிபாபு, அதிதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஏயு மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பி.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். யதார்த்த வாழ்வியலை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் கும்பகோணம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

வைரமுத்து எழுதியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'செவ்வந்தி பூவே' என தொடங்கும் அந்த பாடலை நாளை மாலை வெளியாகிறது.