×

தந்தையர் தினத்தில் வெளியான ஸ்னீக் பீக்... 'கலைமேகங்கள் கலைகின்றன' புதிய அப்டேட் 

 

 தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. விஏயு மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பி.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகிபாபு, அதிதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் கும்பகோணம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

யதார்த்த வாழ்வியலை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.