×

வைரமுத்து வரிகளுக்கு உயிர் கொடுத்த பிரபல பாடகி... ‘கருமேகங்கள் கலைகின்றன’ புதிய அப்டேட் 

 

‘கலைமேகங்கள் கலைகின்றன’ படத்திற்காக பிரபல பாடகி சித்ரா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.  

சமூக சிந்தனைக் கொண்ட திரைப்படங்களை கொடுத்து வரும் தங்கன் பச்சான், நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகிபாபு, அதிதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஏயு மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பி.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடலைகளை வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை பிரபல பாடகி சித்ரா பாடியுள்ளார். மயில் இறகால் துயில் பாடுவது போன்று இந்த பாடலை அவர் பாடியுள்ளார். இந்த பாடல் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது குறித்து குறிப்பிட்டுள்ள வைரமுத்து, 39 ஆண்டுகளுக்கு பின் நான் பார்த்த சித்ரா! அதே குரல்.. கனிவு.. பணிவு .. என்று கூறியுள்ளார்.