×

மிரட்டும் ‘கருப்பர் நகரம்’ படத்தின் டீசர்.

 

கோபி நயினார் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘கருப்பர் நகரம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் கோபி நயினார். தொடர்ந்து நடிகை ஆன்ட்ரியாவை வைத்து ‘மனுஷி’ எனும் படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். படத்தின் முதல் தோற்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது அதன் பின் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை மைய்யமாக வைத்து அவர் இயக்கியுள்ள புதிய படம் ‘கருப்பர் நகரம்’ இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

<a href=https://youtube.com/embed/6_Pm1a6cYdo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/6_Pm1a6cYdo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Karuppar Nagaram -Official Teaser | Jai | Aishwarya Rajesh | JD Chakravarthy | Eswari Rao | R.Ramesh" width="716">

அதன்படி டீசரில் இடம் பெற்றுள்ள ‘உலகம் முழுவதும் ஒரே சண்டதான்…நூறுபேர் பாடுபட்டு ஒருத்தன் பிடுங்கி  திங்கிறதா….இல்ல நூறுபேர் பாடுபட்டு நூறுபேரும் பங்கு போட்டுகிறதாங்குறதுதான் அது’ இந்த வசனம் கவனம் ஈர்த்துள்ளது. மொத்தத்தில் டீசர் படத்தின் மீதான எதிர்பர்பை கூட்டியுள்ளது.