×

மாஸ் பண்ணப்போகும் ஆர்யா... 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு !

 

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 

 நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதைக்களத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள வித்தியாசமான திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. கொம்பன், விரும்பன் போன்ற கிராமத்து திரைப்படங்கள் மூலம் பிரபலமான முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  வழக்கமாக காதல் ரொமான்ஸ் படங்களில் நடிக்கும் ஆர்யா இந்த படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.‌ இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.