×

கிராம நாயகனாக நடித்துள்ள ஆர்யா.. ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு !

 

 ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காதல் மற்றும் ரொமான்ஸ் திரைப்படங்களில் நடித்து வரும் ஆர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம்  'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இப்படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது. 

இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, பாக்யாராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.