×

காதல் ரொமான்ஸ் பாடலாக உருவாகியுள்ள ‘கறிக்குழம்பு வாசம்’ பாடல்.. ஆர்யாவின் படத்தின் செகண்ட் சிங்கிள் !

 

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.  நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். ஆர்யா மிரட்டலான லுக்கில் இருக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இவர் கொம்பன், விரும்பன் போன்ற கிராமத்து திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர்.

வழக்கமாக காதல் ரொமான்ஸ் படங்களில் நடிக்கும் ஆர்யா இந்த படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார்.  இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

இந்த படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வரும் மே 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கறிக்குழம்பு வாசம் என தொடங்கும் அந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.