×

யோசிக்க வைக்கும் கதிரின் ‘யூகி’.. மிரட்டலான டிரெய்லர் வெளியீடு !

 

கதிர் நடிப்பில் உருவாகியுள்ள ‘யூகி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

கதிர், நரேன், நட்ராஜ் ஆகிய மூன்று முக்கிய திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘யூகி’.  இப்படத்தில் கதிர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் நட்ராஜும் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கயல் ஆனந்தி, ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லக்ஷ்மி, நடிகை ஆத்மியா, வினோதினி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். 

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை மிகவும் யோசிக்க வைக்கும் இந்த படத்தின் டிரெய்லர் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

<a href=https://youtube.com/embed/KRsuWD2CY1g?autoplay=1&mute=1&start=41><img src=https://img.youtube.com/vi/KRsuWD2CY1g/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">