×

இணையத்தொடரில் நடிக்கும் கதிர்.... வெளியானது அறிவிப்பு...

 

தமிழ் திரையுலகில் வளர்ந்து ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் கதிர். ‘மதயானை கூட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், விக்ரம் வேதா , பிகில் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் யூகி என்ற படத்தில் நடித்தார். 

இந்நிலையில், கதிர் நடிக்கும் மற்றொரு வெப் தொடர் லிங்கம்.  அதாவது லிங்கம் என்று அழைக்கப்படும் ரவுடி ஒருவரின் வாழ்க்கையை தழுவி இத்திரைப்படம் உருவாகிறது. இந்தியன் 2 படத்தின் வசன கர்தா லட்சுமி நாராயணன் இப்படத்தை இயக்குகிறார். இத்தொடர் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. று கூறப்படுகிறது.