×

சிவகார்த்திகேயன் உடன் மோதும் கவின்.. தீபாவளிக்கு வெளியாகும் ‘Bloody beggar’! 

 

அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடித்துள்ள திரைப்படம் ‘Bloody beggar’. பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். நெல்சன் தயாரிப்பில் Filament Pictures நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் சிவபாலன், நெல்சனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார். ‘Bloody beggar’ படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள நிலையில், நிர்மல் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், Bloody beggar திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, Bloody beggar படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், நடிகர் கவின் பிச்சைக்காரன் வேடத்தில் தோன்றியது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.