×

 கவின் நடித்த 'கிஸ் 'படத்தின் டீசர் ரிலீஸ் 

 

 'கிஸ் 'படத்தில்  கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
 
படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் ’நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெளியான 'லிப்ட்', 'டாடா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்’ திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.