மாறுப்பட்ட தோற்றத்தில் கவின்.... 'ஸ்டார்' ஸ்பெஷல் ப்ரோமோ வெளியீடு !
கவின் நடிப்பில் உருவாகும் 'ஸ்டார்' படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் கவின், 'டாடா' படத்தின் மூலம் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாக மாறிவிட்டார். அந்த வகையில் கவின் நடித்து வரும் அடுத்த படம் 'ஸ்டார்'. இந்த படத்தை ‘பியார் பிரேம காதல்’, ‘கிரகணம்’ ஆகிய படங்களை இயக்கிய இளன் இயக்கி வருகிறார். முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தில் தலைப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இளன் வரிகளில் கவின் மாறுப்பட்ட தோற்றத்தில் உருவாகியுள்ள அந்த ப்ரோமோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.