×

கவின் நடிக்கும் அடுத்த படத்திற்கு கிஸ் என தலைப்பு

 

சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்தவர் நடிகர் கவின். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று ரசிகர்களின் அன்பை பெற்று டைட்டில் வின்னரானார். பின்னர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவான ‘டாடா’ படத்தில் நடித்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு கவினுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கத்தில்  கவின் அடுத்து நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமான ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கவுள்ளது கூடுதல் சிறப்பு. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.