×

அரசியலுக்கு வர ஆசை இல்லை - கேபிஒய் பாலா

 

தொடர்ச்சியாக ஏழை மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை செய்துவரும் நடிகர் கேபிஒய் பாலா, அரசியலில் செல்ல விருப்பமில்லை என்றும் கடைசி வரை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய,  நடிகர் விஜய் கட்சி துவங்கியது குறித்த கேள்விக்கு, பதில் அலித்த அவர், “நடிகர் விஜய் பீக்கில் உள்ளார், தான் வீக்கீல் உள்ளேன். எனவே, அவரைப்பற்றி பேசும் அளவிற்கு தான் பெரிய இடத்தில் இல்லை என்றும் அவர் எது செய்தாலும் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார்.


நடிகர் விஜய் தனது கட்சிக்கு அழைத்தாள் செல்வீர்களா? என்ற கேள்விக்கு, அரசியலில் செல்லும் அளவிற்கு தனக்கு அறிவு இல்லை. பதவி ஆசை எல்லாம் தனக்கு இல்லை. மக்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம் என்றார்.