×

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய ஹிந்தி படம் -எப்போது ரிலீஸ் தெரியுமா ?

 
கடந்த 2024ம் ஆண்டு திரைக்கு வந்து படுதோல்வி அடைந்த ‘பேபி ஜான்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர், கீர்த்தி சுரேஷ். இது தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஹிட்டான ‘தெறி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் ‘பேபி ஜான்’ படத்தை அட்லீ தயாரித்திருந்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்து வரும் படம், ‘ரவுடி ஜனார்தனா’. இதில் அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘கண்ணிவெடி’ படம் திரைக்கு வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படத்துக்கு ‘ரஃப்தார்’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அனுராக் தாகூர், ரோஹன் வர்மா, தான்யா மணிக்தலா, ரஜத் கபூர் நடித்துள்ளனர். ‘செக்டார் 36’ என்ற படத்தை இயக்கியிருந்த ஆதித்யா நிம்பல்கர் இதை இயக்கியுள்ளார்.
ராஜ்குமார் ராவ் மனைவி பத்ரலேகா, தனது கம்பா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் தலைப்பையும், ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் ஜூலை மாதம் 24ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ‘அதிவேகமாக வளரும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் மற்றும் லட்சிய வெறி கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான போராட்டத்தையும் மையப்படுத்திய கதை இது.