☰
×

"பவானி கேரக்டரை மறக்க முடியாது"-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் வெப் தொடர் 

 

நெட்பிளிக்ஸ், யஷ் ராஜ் பிலிம்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அக்கா’ என்ற வெப்தொடர், வரும் 30ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி டீசர் வெளியிடப்பட்டது. பவானியாக கீர்த்தி சுரேஷ், ருத்ராவாக ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். பெண்களை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதையான இதை தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கி இருக்கிறார்.

1980களின் பின்னணி யில் உருவாக்கப் பட்ட இது, பெண்களால் கட்டமைக்கப் பட்டு ஆளப்பட்டு பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘இதுவரை நான் நடித்ததில், பவானி கேரக்டரை மறக்க முடியாது. ராதிகா ஆப்தேவுடன் சேர்ந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.

இக்கதையின் தனித்துவமும், அதன் உலகமும் என்னை பெரிதும் ஈர்த்தது’ என்றார். ராதிகா ஆப்தே கூறும்போது, ‘நான் நடித்த ருத்ரா கேரக்டர் சுவாரஸ்யமானது. அவள் தனது கொள்கைகளால் வழிநடத்தப்படுபவள். தன்னை சுற்றியுள்ள உலகையே கேள்விக்கு உள்ளாக்கும் இயல்பு கொண்டவள். இதிலுள்ள கேரக்டர்களின் சிக்கலான தன்மையும், அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களால் உருவாகும் பதற்றங்களும்தான் இதில் நடிக்க என்னை சம்மதிக்க வைத்தது’ என்றார்