கீர்த்தி சுரேஷ் - ராதிகே ஆப்தே கூட்டணியில் உருவான "அக்கா" டீசர் வெளியீடு
Feb 4, 2025, 11:43 IST
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்த கீர்த்தி சுரேஷ் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் 15 ஆண்டுகளாக காதலித்து வந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாக்களில் கழுத்தில் தாலியுடன் வலம் வந்தார்.