பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..?
Mar 25, 2025, 19:21 IST
நடிகை கீர்த்தி சுரேஷ் , பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் கடைசியாக ரகு தாத்தா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அதை அடுத்து ஹிந்தியில் அவர் நடித்த தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படம் வெளியானது. அதைத் தொடர்ந்த அவருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அக்கா என்ற வெப்சீரியலில் நடித்த கீர்த்தி சுரேஷ், அடுத்து மீண்டும் ஹிந்தியில் காமெடி கலந்த ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது. அந்த வகையில், தற்போது அவர் அந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. கிறதாம்.