×

இந்த அடி அடிக்கிறாங்களே..  கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை..  

 

கீர்த்தி சுரேஷின் தலையில் ஒரு குழந்தை உட்கார்ந்து, தலையை தபேலாவாக மாற்றி அடிக்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, 'பாவம் கீர்த்தி சுரேஷ்' என்று பலரும் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த 'ரகு தாத்தா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

---------

இந்நிலையில், சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு 18 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அவ்வப்போது அவர் தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் திரைப்பட தகவல்களை அதில் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில், கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு குழந்தையை தனது தோளில் தூக்கி வைத்துள்ளார். ஆனால், அந்த குழந்தை கீர்த்தி சுரேஷின் தலையை தபேலாவாக மாற்றி அடிக்கிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் கண்களையும் அந்த குழந்தை பதம் பார்க்கிறது. இந்த வீடியோவில், ‘எனது தலையை தபேலாவாக மாற்றி அடித்தாலும், நான் அமைதியாகவே இருந்தேன்’ என கேப்ஷனாக கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்கு ஏறக்குறைய 4 லட்சம் லைக் களும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன.