கெனிஷா என் வாழ்வின் அழகான துணை - நடிகர் ரவி மோகன்
பாடகி கெனிஷா என் வாழ்வின் அழகான துணை என நடிகர் ரவி மோகன் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் (ஜெயம் ரவி). கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது. தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, சமீபத்தில் நடைப்பெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கலந்துக் கொண்டார். இவருடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் கலந்துக் கொண்டது இணையத்தில் வைரலானது. இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்து மணமக்களை வாழ்த்தினர். இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி இதற்கு ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டார்.
தற்பொழுது அதற்கு பதிலளிக்கும் வகையில் ரவி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை. எனது மகன்களை நான் பிரியவில்லை, மனைவியை மட்டுமே பிரிகிறேன்." என குறிப்பிட்டுள்ளார். மேலும், கெனிஷா, ஆரம்பத்தில் இருந்துஒரு நண்பராக பிரச்சனைகளில் மூழ்கிக் கொண்டிருந்த என்னை மீட்டெடுத்தார்.எனது பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதுஎனக்கு ஆதரவாக நின்றார். என் சூழ்நிலையின் நெருக்கடிகளைப் பார்த்து கொஞ்சம் கூட தயங்காமல் அவர் உதவி செய்தார்.