‘காந்தாரி…காந்தாரி…..கண்ணழகி காந்தாரி..’ தமிழில் கலக்கும் கீர்த்தியின் ஆல்பம் பாடல்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய, இது என்ன மாயம் படத்தில் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமானார்.
அடுத்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனில் கதாநாயகியாக நடித்த அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ‘தொடரி,ரெமோ, பைரவா,தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ‘தேசிய விருதை’ பெற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் முதல் ஆல்பம் வீடியோ பாடலான ‘காந்தாரி’ பாடல் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்தது. சுடாலா அசோக் தேஜா பாடல் வரிகள் எழுத, இந்த பாடலுக்கு பவன் சிஹெச் இசையமைத்திருந்தார். பிரபல நடன இயக்குநர் பிருந்தா நடன இயக்கம் செய்திருந்தார்.
பாடல் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்த நிலையில் எட்டுமாதம் கழித்து இந்த பாடல் தற்பொழுது தமிழ் மொழியில் வெளியாகியுள்ளது. விவேக் பாடல் வரிகள் எழுத, வைஷ் இந்த பாடலை பாடியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.