×

ராபின்ஹுட் படத்தில் 'கெட்டிகா ஷர்மா'வின் கவர்ச்சி நடனம்... பாடல் இணையத்தில் வைரல்...!

 

நிதின்- ஸ்ரீலீலா நடித்துள்ள ராபின்ஹுட் படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கி குடுமுலா எழுதி இயக்கியுள்ள திரைப்படம்  ராபின்ஹுட். இப்படத்தில் நிதின் கதாநாயகனாகவும், ஸ்ரீலீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராஜேந்திர பிரசாத் ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராபின்ஹுட் திரைப்படம் மார்ச்  28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி உள்ளது.  


<a href=https://youtube.com/embed/wucE7a6H-KM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/wucE7a6H-KM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் 3-வது பாடலான 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா  கவர்ச்சி நடனமாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.