×

கே.ஜி.எஃப் பாணியில் உருவாகியுள்ள மார்கோ திரைப்படம் - டீசர் வெளியீடு

 
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் உன்னி முகுந்தன். சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் பதிந்தார். இவர் தற்பொழுது மார்கோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹனீஃப் அதேனி இயக்கியுள்ளார். இதற்கு முன் நிவின் பாலி நடித்த மைக்கேல் படத்தை இயக்கியவராவர். படத்தின் செகண்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் மிகவும் ஆக்ஷன், வயலன்ஸ், துப்பாக்கி, ரவுடிசம் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தின் டீசர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரின் காட்சிகள் மிகவும் மிரட்டலாக அமைந்து இருக்கிறடு. படத்தின் பின்னணி இசை ரவி பஸ்ருர் மேற்கொடுள்ளார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. <a href=https://youtube.com/embed/5dy3azady4w?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/5dy3azady4w/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">