விரைவில் ஹீரோயினாகும் மகள்.. பூரிப்பில் நடிகை குஷ்பூ !
பிரபல நடிகை குஷ்பூவின் மகள் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பூ. தமிழில் பிரபுவின் ‘சின்னத்தம்பி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமனார். ரஜினி, கமல், சரத்குமார் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
இதையடுத்து ‘முறைமாமன்’ படத்தை இயக்கிய சுந்தர்.சியுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சுந்தர்.சி-குஷ்பூ தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர். நடிகையாக இருக்கும் குஷ்பூ தயாரிப்பாளராகவும், சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகிறார். தற்போது அரசியலில் பா.ஜ.க கட்சியில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது மூத்த மகள் அவந்திகா, விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது மூத்த மகள் அவந்திகா, லண்டனில் நடிப்பு பயிற்சி படிப்பை முடித்திருக்கிறார். அதனால் விரைவில் சினிமாவில் தனது பயணத்தை துவங்கவிருக்கிறார். அவருக்கு நாங்கள் அறிமுகமோ அல்லது சிபாரிசோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்தவேண்டும் என்று ரசிகர்களை குஷ்பூ கேட்டுக்கொண்டுள்ளார்.