#Khushbusundar எனக்கும் குஷ்புவிற்கும் "மாளவிகா"-வால் ஏற்பட்ட பிரச்சனை- சுந்தர் சி ஓபன் டாக்
சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஒரு தனியார் யூடியூப் சேனலில் அளித்துள்ள பேட்டியில் சுந்தர்.சி தனது முந்தைய படங்களில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இந்த ஃபேன்ஸ் மீட்டில் விமல், மிர்ச்சி சிவா, ஹிப்பாப் ஆதி ஆகியோர் வீடியோ மூலமாக சுந்தர் சி-க்கு கேள்வி எழுப்பினர். அப்போது சுந்தர் சி மிகவும் கலகலப்பாக தனது பதிலை பதிவு செய்தார். அதேபோல் நடிகை மாளவிகா, என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது சுந்தர் .சி சார் தான். என்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றியதும் அவர்தான். எனக்கு அவர்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் . அவர் சினிமாவில் அறிமுகப்படுத்துனதுல சுந்தர் .சி சாருக்கு பேவரிட் யார் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுந்தர்.சி, அவங்களுக்கு மாளவிகா என்று பெயர் வைத்ததினால் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் பெரிய சண்டை ஆயிடுச்சு. ஏன்னா குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசித்து என்னுடைய மனைவி மாளவிகா என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தார். ரெண்டு நாளா புக்குல தேடி பெயரை செலக்ட் பண்ணி வச்சிருந்தாங்க. நானும் சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டேன். தேவா சார் கூட கம்போசிங் வேலைக்காக நான் இருந்தபோது, ஹீரோயின் பேரில் பாட்டு இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு நான் சொல்ல, அவர் வெவ்வேறு பேர்ல பாட்டு சொல்லியும் செட் ஆகல. ஏதாவது ஒரு நல்ல பெயர் தான் சொல்லுங்க என்று அவர் என்கிட்ட கேட்டார். டக்குனு நான் மாளவிகான்னு சொன்னேன். அதிலேயே அவரது பாட்டு பாட எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. பாட்டுல அந்த பெயர் வரவும் ஹீரோயினுக்கும் அதே பெயரை வச்சிட்டோம் . இப்படி மாளவிகா பெயரால் தனக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த சண்டையை சுந்தர் .சி கலகலப்பாகப் சொல்ல அவரது ரசிகர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.