கியாரா அத்வானி பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த கேம் சேஞ்சர் படக்குழு
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இதில் அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்ள தில் ராஜூ தயாரித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'கேம் சேஞ்சர்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.