×

வேட்டையன் படத்தில் ஹரிஷ் ஆன கிஷோர் - அசத்தல் வீடியோ வெளியீடு

 

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்." அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்யும் வீடியோக்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதன்படி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரிய், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகர் கிஷோர் 'ஹரிஷ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.

null


பிரபல நடிகரான 'ஆடுகளம்' கிஷோர் வன யுத்தம், வெண்ணிலா கபடி குழு, ஆடுகளம், உதயம் என்எச் 4, சார்பட்டா பரம்பரை, பொன்னியின் செல்வன், ஜெயிலர் என பல படங்களில் நடித்துள்ளார். வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.