×

`கிஸ்' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ ரிலீஸ்

 

சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள `கிஸ்' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் கிஸ்.டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார்.

<a href=https://youtube.com/embed/qmrOz9JttVE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/qmrOz9JttVE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார்.இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது . கிஸ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது. முதல் பாடல் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இப்பாடலை  அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.